நயன்தாரா மீது நம்பிக்கை வைத்திருக்கும் பாண்டியராஜ்
Send us your feedback to audioarticles@vaarta.com
'பசங்க 2', 'கதகளி' ஆகிய இரண்டு ஹிட் படங்களை அடுத்து இயக்குனர் பாண்டியராஜ் அடுத்ததாக சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' படத்தை முடித்து வெளியிடுவதில் மும்முரம் காட்டி வருகிறார். இது நம்ம ஆளு' படத்தின் முதல்பாதி பின்னணி இசைக் கோர்ப்பு பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும் இரண்டாம் பாதிக்கான வேலைகள் ஆரம்பமாக இருப்பதாகவும் பாண்டியராஜ் தெரிவித்துள்ளார். இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே காட்சிப்படுத்த பாக்கி இருப்ப்பதாகவும், அந்த பாடலுக்காக நயன்தாராவிடம் வாங்கிய தேதிகள் வீணாகிவிட்டாலும் மீண்டும் இந்த படத்துக்காக நயன்தாரா தேதிகள் அளிப்பார் என்று நம்புவதாகவும் பாண்டியராஜ் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
'ஐ யம் வெயிட்டிங்' என்று தொடங்கும் இந்த பாடல் கண்டிப்பாக பீப் பாடலை விட நன்றாக இருக்கும் என்றும் மீதமுள்ள பணிகளை முடித்துவிட்டு இந்த படத்தை பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வெளியிட இருப்பதாகவும் பாண்டியராஜ் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்குவதில் இருந்து ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பின்வாங்கியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout