அண்டை மாநிலத்திடம் ஏன் நீர் பிச்சை எடுக்க வேண்டும்: சிம்பு பட தயாரிப்பாளர் ஆவேசம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அண்டை மாநிலத்திடம் ஏன் நீர் பிச்சை எடுக்க வேண்டும் என சிம்பு நடித்த ’மாநாடு’ உள்பட பல திரைப்படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:
நீரை சேகரிக்க இனியாவது நாம் பழக வேண்டும். நீர்ப் பிச்சை எடுக்கிறோமா? இல்லை, அரசியல் பிச்சைக்காக பயனாகிறதா காவிரி எனத் தெரியவில்லை.
காவிரிப் படுகை விவசாயிகளின் தேவைக்கு நீரை சேகரிக்கும் நடவடிக்கைகளில் இத்தனை ஆண்டு காலம் எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவே இல்லை. மாற்றுத் திட்டம் வேண்டாமா நமக்கு?
மானத் தமிழன் வீரத் தமிழன் என்பது வெறும் பேச்சில் தானா?? தண்ணீர் தருகிறேன் எனச் சொன்னாலும்... வேணாம். தேவையில்லை. எங்கள் தேவையை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் எனும் நிலையை எப்போது உருவாக்கப் போகிறோம்??
நேற்று நடந்த சித்தா பட விழாவில் கன்னடத்தில் பேச முயற்சித்தும் சித்தார்த்தால் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தொடர இயலவில்லை. அவ்வளவு தெளிவாக அரசியல் நடத்தும் வித்தை அண்டை மாநிலத்தவருக்குத் தெரிந்திருக்கிறது.
நமக்கு ஏன் தெரியவில்லை? காலங்காலமாக கடந்து வரும் கேள்விக்கு பதில் தேட வேண்டிய நேரம் இது.
நீரை சேகரிக்க இனியாவது நாம் பழக வேண்டும். நீர்ப் பிச்சை எடுக்கிறோமா? இல்லை, அரசியல் பிச்சைக்காகப் பயனாகிறதா காவிரி எனத் தெரியவில்லை. காவிரிப் படுகை விவசாயிகளின் தேவைக்கு நீரை சேகரிக்கும் நடவடிக்கைகளில் இத்தனை ஆண்டு காலம் எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவே இல்லை. மாற்றுத் திட்டம்…
— sureshkamatchi (@sureshkamatchi) September 29, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments