அசால்ட்டாக 90 கிலோ பளூதூக்கிய சிம்பு பட நடிகை: வீடியோ வைரல்
- IndiaGlitz, [Thursday,July 14 2022]
வெயிட் லிப்டிங் என்று கூறப்படும் பளுதூக்குதலில் அசால்டாக 90 கிலோவை தூக்கிய சிம்பு பட நடிகையின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை மஞ்சிமா மோகன். இவர் சிம்பு நடித்த ’அச்சம் என்பது மடமையடா’ கௌதம் கார்த்திக் நடித்த ’தேவராட்டம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ரெகுலராக ஜிம் சென்று உடற்பயிற்சி செய்யும் மஞ்சிமா மோகன் சமீபத்தில் 90 கிலோ வெயிட் லிப்டிங் என்ற பளுதூக்குதல் செய்த வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் முதலில் அவரது பயிற்சியாளர் 65 கிலோ எடை தூக்கும் பயிற்சியை மேற்கொள்ள அதை வெற்றிகரமாக முடித்த மஞ்சிமா மோகன், அதனை அடுத்து பயிற்ச்சியாளர் கொடுத்த 90 கிலோ பளூதூக்குதலையும் வெற்றிகரமாக முடித்தார். இது குறித்த வீடியோவை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை மஞ்சுமா மோகன் பதிவு செய்த இந்த வீடியோவுக்கு நடிகர் கவுதம் கார்த்திக் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் பல திரையுலக பிரபலங்கள் அவருடைய வீடியோவை லைக் செய்துள்ளனர்.
நடிகை மஞ்சிமா மோகன் தற்போது ’அக்டோபர் 31 லேடீஸ் நைட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.