கர்ப்பிணி மனைவியை தரதரவென இழுத்து சென்ற கணவர்.. விளக்கம் அளித்த சிம்பு பட நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு படத்தில் நாயகி ஆக நடித்த நடிகை தற்போது கர்ப்பமாக இருந்து வரும் நிலையில் அவரது கணவர் அவரது கையை பிடித்து தர தர என இழுத்துச் சென்ற வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சிம்பு நடித்த ’சிலம்பாட்டம்’ என்ற திரைப்படத்தில் நாயகி ஆக நடித்தவர் நடிகை சனாகான். இந்த படத்தை அடுத்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்தார் என்பதும் அதன் பின்னர் அவர் பாலிவுட் சில படங்கள் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பிக் பாஸ் இந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இரண்டாம் இடத்தை பிடித்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நடிகை சனா கான் கடந்த 2020 ஆம் ஆண்டு முக்தி அனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடிகை சனாகான் தனது கணவருடன் இப்தார் விருந்தில் கலந்து கொண்ட நிலையில் திடீரென சனாம் கானை அவரது கணவர் கையை பிடித்துக் கொண்டு தரதரவென இழுத்துச் சென்ற வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நடிகை சனாகான் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் இப்படியா கையை பிடித்து இழுத்துச் செல்வது? என இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் கமெண்ட் அளித்தனர்.
இது குறித்து நடிகை சனாகான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த வீடியோ இப்போதுதான் எனது கவனத்திற்கு வந்தது. என் அன்பான சகோதர சகோதரிகள் எனக்கு ஆதரவாக தெரிவித்த கருத்து எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் நாங்கள் எங்கள் கார் டிரைவர் தொடர்பை இழந்தோம், நான் வழக்கத்தைவிட நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததால் எனக்கு வியர்த்து அசௌகரியமாக இருந்தது. அதனால்தான் என்னை எனது கணவர் இந்த விருந்து நிகழ்ச்சியில் இருந்து உடனடியாக வெளியே அழைத்துச் செல்ல விரும்பினார்.
நான் காரில் உட்கார்ந்தால் தான் தண்ணீர் மற்றும் சிறிது சாப்பிட முடியும், அது மட்டும் இன்றி எனக்கு வெளி காற்றும் கிடைக்கும், அதனால்தான் என்னை அவசர அவசரமாக எனது கணவர் என்னை அழைத்துச் சென்றார். மேலும் விருந்தினர்களின் நிகழ்ச்சியை நாங்கள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்பதால் விரைவாக வெளியே செல்லலாம் என்று நான் அவரிடம் கூறினேன். எனவே எனது வேண்டுகோள் காரணமாக தான் அவர் என்னை வெளியே அழைத்துச் சென்றார். இருப்பினும் உங்கள் அக்கறைக்கு எனது நன்றி’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments