சிம்புவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வெளியாகி படுதோல்வி அடைந்த நிலையில் இந்த படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சமீபத்தில் பேட்டியில் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி ஒரு நீண்ட விளக்க அறிக்கையும் தயாரிப்பாளர் தரப்பில் வெளியானது.
இந்த அறிக்கையில் சிம்பு டப்பிங் பேச வராமல், வேண்டுமென்றால் பாத்ரூமில் இருந்து பேசுகிறேன், அதை ரெக்கார்டு செய்து கொள்ளுங்கள் என்று கூறியதாக உள்ள வரிகள் சோம்பேறித்தனத்தின் உச்சமா? அல்லது திமிறின் வெளிப்பாடா? அல்லது அறியாமையா? என்று சிம்புவின் மனதுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. இந்த நிலையில் இதை வைத்து நெட்டிசன்கள் சிம்புவை கலாய்த்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்
அவன் அவன் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு மெரினாக்கு போய்ட்டு இருந்தான் .. ஆனா சிம்பு மட்டும் வீட்டு வாசல்லயே போராட்டம் பண்ணாப்ல.. அப்பவே தெரிய வேணாம் சிம்புவ பத்தி, வீட்டை விட்டு வெளிய போறது கூட ஒரு வேலையா இருக்கே!
என்ன சார் இது மதுரைல கதை நடக்குதுனா மதுரைலேயேவா எடுப்பீங்க போங்க சார் போய் கோவால சூட்டிங் வைங்க - சிம்பு
சிம்பு : தயாரிப்பாளர் சங்கத்தை பார்த்து நான் ஏன்பா பயப்புடனும் ஆமாயா லேட்டா தான் வருவேன் என்ன பண்ணுவ ரெட் கார்டு போடுவியா போட்டுக்கோ
TR .உன்னைய பாத்தாலே தெரியுதுடா நீ இந்த வேலையெல்லாம் பார்த்து இருப்பனு சரி தயாரிப்பாளர் சங்கத்துல இருந்து எல்லாரும் வந்து இருக்கானுங்க சத்தியமா நான் எதுவும் பண்ணலன்னு சொல்லு மீதியை நான் பார்த்துக்கிறேன்
சிம்பு : இருப்பா இப்போ தான வந்தானுங்க ஒரு 1 மணி நேரம் நிக்கட்டும் 1/2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments