சிம்புவை சந்தித்த மகத்-பிராச்சி: அட்டகாசமான புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்புவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களின் ஒருவருமான மகத், கடந்த 2000 ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி பிராச்சி மிஸ்ரா என்பவரை திருமணம் செய்தார் என்பதும் இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்பதும் அந்த குழந்தைக்கு அதியமான் ராகவேந்திரா என்ற பெயரை வைத்தார்கள் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சிம்பு மற்றும் மகத் ஆகிய இருவரும் அவ்வப்போது ஆன்மீக சுற்றுலா உட்பட பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தார்கள் என்பது தெரிந்ததே. அந்தவகையில் தற்போது சிம்புவுடன் மகத் மற்றும் பிராச்சி மிஸ்ரா இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
சிம்பு, மகத் மற்றும் பிராச்சி ஆகிய மூன்று பேரும் இணைந்து இருக்கும் இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிராச்சி மிஸ்ரா பதிவு செய்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout