'பத்து தல' படத்திற்கு பின் ஏற்பட்ட கேப்.. சிம்புவின் மாஸ் திட்டம்!

  • IndiaGlitz, [Thursday,December 22 2022]

நடிகர் சிம்பு சமீபத்தில் ’பத்து தல’ என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு தற்போது சில மாதங்கள் அவருக்கு ஓய்வு கிடைத்துள்ளதாகவும் இந்த கேப்பில் அவர் ஒரு மாஸ் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு என்பதும் அவர் நடித்த ’மாநாடு’ மற்றும் ’வெந்து தணிந்தது காடு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகின என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் சிம்பு நடித்து வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பத்து தல’ படத்திற்கு பின்னர் அவர் ’கொரோனா குமார்’ என்ற படத்தில் நடிப்பார் என்றும் அது மட்டுமின்றி ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் அவரது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் ’பத்து தல’ படத்திற்கு பின் ஏற்பட்ட கேப்பில் சிம்பு தற்காப்பு கலை ஒன்றின் பயிற்சியில் ஈடுபட போவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் தனது அடுத்த படத்திற்காக தான் இந்த தற்காப்பு பயிற்சி ஈடுபடப் போகிறார் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

More News

சினேகாவின் அடுத்த படத்தின் கேரக்டர் அறிவிப்பு: வைரலாகும் போஸ்டர்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சினேகாவின் அடுத்த படத்தின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. 

பிரபல நடிகர்-தயாரிப்பாளர் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி: அண்ணாமலை நேரில் வாழ்த்து!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளரின் மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்ற நிலையில் பல திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு

இந்த ஒரு காரணத்திற்காக தான் ஆடியோ லாஞ்சுக்கு செல்வதில்லை: நயன்தாரா

 தமிழ் திரை உலகில் அஜித் மற்றும் நயன்தாரா ஆகிய இருவருமே தாங்கள் நடிக்கும் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு செல்வது இல்லை என்றும் படங்களில் ஒப்பந்தம் ஆகும் போதே புரமோஷன் நிகழ்ச்சிக்கு வர

கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட பிக்பாஸ் மும்தாஜ்: வைரல் வீடியோ

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மும்தாஜ் தற்போது மெக்கா புனித பயணம் சென்றுள்ள நிலையில் அங்கு அவர் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு கண்ணீருடன் பதிவு செய்த வீடியோ

ஆஸ்கர் விருதை நெருங்கிய  'ஆர்.ஆர்.ஆர்' : எந்த பிரிவில் தெரியுமா?

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான 'ஆர்.ஆர்.ஆர்' என்ற திரைப்படம் ஆஸ்கார் விருதை நெருங்கிவிட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி படக்குழுவினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை