'பத்து தல' படப்பிடிப்பில் மாஸ் லுக்கில் சிம்பு: வைரல் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்துவரும் ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இடையில் சிம்புவின் தந்தை டி ராஜேந்தரின் உடல்நலக்குறைவு காரணமாக படப்பிடிப்பு தாமதமானது.
இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து திரும்பிய சிம்பு மீண்டும் ’பத்து தல’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் சிம்பு, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’பத்து தல’ படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி இந்த படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட இரண்டு மாஸ் ஸ்டில்களையும் வெளியீட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் ’பத்து தல’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், மனுஷ்யபுத்திரன் உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சூர்யா-ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பதும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Shooting in progress…. ??#PathuThala pic.twitter.com/8ghqApLijf
— Silambarasan TR (@SilambarasanTR_) August 1, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments