'பத்து தல' படப்பிடிப்பில் மாஸ் லுக்கில் சிம்பு: வைரல் புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Monday,August 01 2022]

சிம்பு நடித்துவரும் ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இடையில் சிம்புவின் தந்தை டி ராஜேந்தரின் உடல்நலக்குறைவு காரணமாக படப்பிடிப்பு தாமதமானது.

இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து திரும்பிய சிம்பு மீண்டும் ’பத்து தல’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் சிம்பு, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’பத்து தல’ படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக அறிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட இரண்டு மாஸ் ஸ்டில்களையும் வெளியீட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் ’பத்து தல’ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், மனுஷ்யபுத்திரன் உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சூர்யா-ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பதும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

குடும்பத்தோடு ரம்யா பாண்டியன் எங்கே சென்றுள்ளார் தெரியுமா? க்யூட் வீடியோ வைரல்

நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் தெரிந்ததே. 

எஞ்சாய் எஞ்சாமி பாடல்: மாறி மாறி அறிக்கை வெளியிட்ட தெருக்குரல் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன்!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் பாடிய 'எஞ்சாய் எஞ்சாமி' என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் யூட்யூபில்

கார்த்திக் சுப்புராஜின் சூப்பர்ஹிட் படம்: இரண்டாம் பாகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

 கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதை அடுத்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

'வெந்து தணிந்தது காடு' படத்தில் 'மாநாடு' கனெக்சன்: ஆச்சரிய தகவல்

 சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

கமல்ஹாசனின் அடுத்த ஐந்து படங்கள்: லிஸ்ட்டில் இந்த இயக்குனருமா?

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த 'விஸ்வரூபம் 2' என்ற திரைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான நிலையில் நான்கு ஆண்டுகள் அவருடைய படம் எதுவும் வெளியாகவில்லை.