நீளமான குடுமியுடன் மாஸ் லுக்.. வேற லெவலில் சிம்புவின் 'STR48' லுக்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் ’STR48’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக அவர் வேற லெவல் கெட்டப்பில் தயாராகி வருவதாகவும் இதற்காக அவர் அமெரிக்காவில் சென்று பயிற்சி எடுத்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது சமூக வலைத்தளத்தில் சிம்புவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் சிம்பு நீளமான குடுமி வைத்து மாஸ் லுக்கில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் அவரது சட்டையில் சீறும் புலி இருப்பதை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’STR48’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தேர்வு நடந்து வருவதாக கூறப்பட்டது. தீபிகா படுகோன், திஷா பதானி உட்பட பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Positive Mind Positive Vibes👍🏾#STR48 #BloodandBattle pic.twitter.com/AN5KWM9mHY
— Desingh Periyasamy (@desingh_dp) September 4, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com