நடிகர் சிம்புவின் மாஸ் லுக்: 'பத்து தல' கெட்டப்பா?

  • IndiaGlitz, [Friday,May 13 2022]

பிரபல நடிகர் சிம்பு நடிப்பில் உருவான 'வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் தற்போது அவர் ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் என்று செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சற்று முன் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் மாஸ் லுக்குடன் கூடிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த லுக் அவர் நடித்து வரும் ‘பத்து தல’ படத்திற்கான லுக் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புகைப்படத்தை சிம்புவின் ரசிகர்கள் ஏராளமானோர் லைக் செய்து வருகின்றனர். 

சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், மனுஷ்யபுத்திரன் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சூர்யா-ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கி வருகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘முப்தி’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படமான ’பத்து தல’ திரைப்படத்தில் சிம்பு கேங்க்ஸ்டர் கேரக்டரிலும், கௌதம் கார்த்திக் காவல்துறை அதிகாரி கேரக்டரிலும் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் சிம்பு மற்றும்  சிம்பு - கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் சில காட்சிகளின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது.