சிம்பு, ஜி.வி.பிரகாஷ் படங்களின் சென்னை வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,November 21 2016]

கடந்த 11ஆம் தேதி வெளியான சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் மற்றும் கடந்த வாரம் வெளியான ஜி.வி.பிரகாஷின் 'கடவுள் இருக்குறான் குமாரு' படங்களின் சென்னை வசூல் நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்
சிம்புவின் அச்சம் என்பது மடமையடா' கடந்த வார இறுதியில் சென்னையில் 22 திரையரங்க வளாகங்களில் 287 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ. 88,68,540 வசூல் ஆகியுள்ளது. மேலும் இந்த படம் வெளியான நவம்பர் 11 முதல் நேற்று வரை சென்னையில் ரூ.4,34,29,220 வசூல் ஆகியுள்ளது. சிம்புவின் படங்களில் சென்னையில் அதிக வசூலான படம் இதுதான் என்ற பெருமையை இந்த படம் பெற்றுள்ளது.
அதேபோல் ஜி.வி.பிரகாஷின் 'கடவுள் இருக்குறான் குமாரு' திரைப்படம் கடந்த வார இறுதியில் சென்னையில் 18 திரையரங்க வளாகங்களில் 223 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.79,41,360 வசூலாகியுள்ளது. திரையரங்குகளில் 90% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர். மேலும் 'த்ரிஷா இல்லைனா' நயன்தாரா' படத்திற்கு பின்னர் அதிக வசூல் செய்த ஜி.வி.பிரகாஷ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' படத்தின் பிரமாண்டமான ஃபர்ஸ்ட்லுக் விழா துளிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் '2.0' ...

சூர்யாவின் 'எஸ் 3' பாடல்கள் ரிலீஸ் தேதி

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'எஸ் 3' படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பார்வையாளர்கள் எண்ணிக்கையில் பெரும் சாதனை...

ஷாலினி அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அஜித்தின் மனைவியும் பிரபல நடிகையுமான ஷாலினி அஜித் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ரஜினி-கமலுடன் இணையும் அமிதாப்-ஷாருக்கான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான '2.0' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை மும்பையில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

தனுஷ்-கவுதம்மேனன் படத்தின் பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி

கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுள்ள நிலையில் அவர் இயக்கும் மற்றொரு படமான தனுஷின் 'எனை நோக்கி பாயும் திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 25ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.