கனி வீட்டுக்கு சென்று 'காரக்குழம்பு' சாம்பிட்ட சிம்பு: வைரல் புகைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான கனியின் வீட்டுக்கு சிம்பு, ரக்ஷன் மற்றும் மகத் சென்று கார குழம்பு சாப்பிட்டதன் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகியது. இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கானோர் ரசிகர்கள் ஆக மாறினார் என்பதும், சமையல் நிகழ்ச்சி என்பதையும் தாண்டி இந்த நிகழ்ச்சியில் இருந்த நகைச்சுவை அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ‘குக்’களும் கோமாளிகளும் நான்ஸ்டாப் காமெடி செய்தனர் என்பதே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம்
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கனி டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றார் என்பது தெரிந்தது. அவருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேயின்போது சிறப்பு விருந்தினராக சிம்பு வந்து இருந்தார் என்பதும் அப்போது கனியிடம் உங்கள் கார குழம்பை சாப்பிட நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்று கூறியதும் தெரிந்தது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சிம்பு, மகத் மற்றும் ரக்ஷன் ஆகிய மூவரும் கனியின் வீட்டிற்கு சென்று அவருடைய காரக்குழம்பை ரசித்து சாப்பிட்டுள்ளனர். இதுகுறித்து கனியின் கணவர் இயக்குனர் திரு தனது டுவிட்டரில் ’சிம்பு, மகத் மற்றும் ரக்ஷன் ஆகிய மூவரும் தங்களுடைய வீட்டுக்கு வருகை தந்தமைக்கு நன்றி என்றும் அவர்களது வருகை மிகுந்த ஆச்சரியம் அளித்தது என்றும் கனியின் காரக்குழம்பை அவர்கள் சாப்பிட்டு ரசித்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Thank you brother @SilambarasanTR_ @MahatOfficial @RakshanVJ #Sayed
— Thiru (@dir_thiru) April 19, 2021
For coming home. It was a present Surprise ❤️
Hope you all liked @karthigathiru s Karakozhambu ?? pic.twitter.com/zbnV33Opc3
மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளில்லை????நிரம்ப நன்றிகள்???????? @SilambarasanTR_ @MahatOfficial @RakshanVJ @dir_thiru #CookWithComali2 #CookuWithComali2 pic.twitter.com/P7yDeRlNwP
— கனி (@karthigathiru) April 19, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com