close
Choose your channels

சூப்பர்ஹிட் இயக்குனருடன் மீண்டும் இணைந்த சிம்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

Friday, January 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ கடந்த பொங்கல் தினத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’மாநாடு’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் கிருஷ்ணா இயக்கத்தில் ’பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சிம்புவின் புதிய படம் ஒன்றின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் ஒன்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்த புகைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது என்பதும் இந்த புகைப்படத்தில் ஐசரி கணேஷ், சிம்பு மற்றும் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் ஆகியோர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் அதன் பிறகு இருவரும் மீண்டும் இணைந்த ’அச்சம் என்பது மடமையடா’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே

மேலும் சிம்பு நடிக்கவுள்ள ‘பத்து தல’ படத்தில் கவுதம் மேனன் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் சூப்பர் ஹிட் இயக்குனர் கௌதம் மேனன் அவர்களுடன் சிம்பு இணைந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment