விஷ்ணு விஷாலின் 'எப்.ஐ.ஆர்' படத்தில் இணைந்த சிம்பு: மாஸ் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷ்ணு விஷால் நடித்த ‘எப்.ஐ.ஆர்’ என்ற திரைப்படம் வரும் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட இருப்பதை அடுத்து ப்ரமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை சிம்பு பாடிய உள்ளதாக அறிவிக்கப்பட்டு, அந்த பாடல் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து விஷ்ணு விஷாலின் ‘எப்.ஐ.ஆர்’ படத்தில் சிம்பு இணைந்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷால், ரெபா மோனிகா, கௌதம் மேனன், மஞ்சிமா மோகன், பார்வதி, கௌரவ் நாராயணன், ரைசா வில்சன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை மனு ஆனந்த் இயக்கி உள்ளார். அஸ்வத் இசையில், அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Dear #Atman @SilambarasanTR_, thank you for always being by my side.. #FIRThemeSong to be released on 7th February! #AbdulKhaaliq sings for #IrfanAhmed ??#STRforFIR @itsmanuanand @mohan_manjima @raizawilson @Reba_Monica @menongautham @VVStudioz
— IRFAN AHMED (ABA) (@TheVishnuVishal) February 5, 2022
pic.twitter.com/NiEQcwpwqK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments