விஜய்யின் 'வாரிசு' படத்தில் சிம்புவா? ரசிகர்கள் செம குஷி!

  • IndiaGlitz, [Friday,November 25 2022]

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே இருக்கும் நிலையில் தற்போது கடைசியாக சிம்புவும் இணைந்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில், தமன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலை பாடி இருப்பதாகவும் இந்த பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கும் சிம்பு ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிபிடத்தக்கது. இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தில் சிம்பு பாடிய பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.
 

More News

20 வயது நடிகையின் அம்மாவுக்கு பிறந்த குழந்தை.. ரசிகரின் கேள்விக்கு பதிலடி!

 20 வயதான நடிகையின் அம்மாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ள நிலையில் இதுகுறித்து சர்ச்சைக்குரிய கேள்வியை கேட்ட ரசிகருக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு பின் பிறந்த குழந்தை: 'விக்ரம்' நடிகரின் பதிவு வைரல்

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படமான 'விக்ரம்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் கழித்து

அரவிந்த் சாமியின் மகன், மகள் என்ன படிப்பு படித்திருக்கிறார்கள் தெரியுமா? லேட்டஸ்ட் புகைப்படம்

 தமிழ் திரையுலகின் அழகான நடிகர்களில் ஒருவரான அரவிந்த்சாமியின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பதட்டமும் தைரிய குறைச்சலும் இருந்தது.. 'மாநாடு' படம் குறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

 சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'மாநாடு' திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவு பெற்றதை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

ரஜினியின் 'பாபா' படத்தில் அனிருத்? ஆச்சரியமான தகவல்!

தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு உருவான '3' என்ற படத்தில்தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்ததே.