'குக் வித் கோமாளி' ஃபைனல்: பிரபல நடிகரின் கையால் டைட்டில் பட்டம் பெற்றாரா கனி?

ரசிகர்களின் மாபெரும் ஆதரவுடன் கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பி வந்த ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சி வரும் வாரத்துடன் நிறைவு அடைகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியின் ஃபைனலில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் பவித்ரா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் ஃபைனல் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்ததாகவும் இதில் கனி வெற்றி பெற்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் ஷகிலா இரண்டாவது இடத்தையும், அஸ்வின் 3-வது இடத்தையும் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு வந்து இருந்தார் என்றும், டைட்டில் பட்டம் வென்ற கனிக்கு அவர்தான் டைட்டில் பட்டத்தை அளித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் ஃபைனல் குக் வித் கோமாளி நிகழ்ச்சி 5 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.