'புதிய பாதை 2' ஹீரோ யார்? பார்த்திபனின் பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Wednesday,September 30 2020]

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த முதல் திரைப்படம் ’புதிய பாதை’. கடந்த 1989ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய சாதனை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படம் சிறந்த தமிழ் படம் மற்றும் சிறந்த துணை நடிகை ஆகிய இரண்டு தேசிய விருதுகளை பெற்றது என்பதும் சிறந்த துணை நடிகைக்கான விருதை மறைந்த பழம்பெரும் நடிகை மனோரமா பெற்றார் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தமிழக அரசின் சிறந்த படம் மற்றும் சிறந்த கதாசிரியர் என்ற விருதையும் இந்த படம் வென்றது

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து செய்திகள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்த படம் குறித்து ரசிகரின் கேள்வி ஒன்றுக்கு சமீபத்தில் பதிலளித்த பார்த்திபன் ’புதிய பாதை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதாக இருந்தால் அதில் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என்று நான் கருதினேன். இது குறித்து சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கின்றது. விரைவில் ’புதிய பாதை 2’ குறித்து அறிவிப்பு வெளிவரும் என்று கூறினார்

அதே போல் தன்னுடைய ’உள்ளே வெளியே’ திரைப்படத்தை ரீமேக் செய்வதாக இருந்தால் அதிலும் ஹீரோ கேரக்டருக்கு பொருத்தமாக சிம்பு மட்டுமே இருப்பார் என நான் கருதுகிறேன்’ என்று கூறியுள்ளார். பார்த்திபனின் இந்த பதிலால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.