பிம்பத்தை உடைக்கவே குரல் கொடுத்தேன்: சிம்பு

  • IndiaGlitz, [Tuesday,April 17 2018]

காவிரி பிரச்சனை ஒருபக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் கர்நாடக மாநிலத்திற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமே போராட்டக்களத்தில் உள்ளது. இந்த நிலையில் நடிகர் சிம்பு வித்தியாசமாக கர்நாடக மக்கள் நல்லவர்கள், அவர்களிடம் கேட்கும் முறையில் கேட்டால் நிச்சயம் தண்ணீர் தருவார்கள் என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சிம்பு, 'காவிரியில் இருந்து  தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று கர்நாடக அரசும், கர்நாடக அரசியல்வாதிகளும் கூறுவது எதனால் என்றால், தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கும் கட்சிக்கு ஓட்டு கிடைக்காது என்பதுதான்.

இந்த பிம்பத்தை மாற்றி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுத்தால்தான் ஓட்டு என்ற நிலையை வரவழைத்துவிட்டால் நமக்கு தண்ணீர் கிடைத்துவிடும். அதற்கான முயற்சியில்தான் தான் ஈடுபட்டு வருவதாக சிம்பு கூறியுள்ளார். சிம்புவின் இந்த முயற்சி வெற்றி அடையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்