300 நாட்களில் 3 மில்லியன்: யாரும் செய்யாத சாதனையை செய்த சிம்பு!

  • IndiaGlitz, [Sunday,August 29 2021]

நடிகர் சிம்பு சுமார் 300 நாட்களில் மூன்று மில்லியன் ஃபாலோயர்களை பெற்றிருப்பது கோலிவுட் திரையுலகில் யாரும் செய்யாத சாதனை என்று கூறப்பட்டு வருவதை அவரது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் சிம்பு கடந்த சில வருடங்களாக எந்த சமூக வலைதளங்களில் இல்லாமல் ஒதுங்கி இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் அவர் மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கைத் தொடங்கினார்.

இந்த நிலையில் சிம்பு இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கி சுமார் 300 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் தற்போது அவருடைய பக்கத்திற்கு 3 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளன. இவ்வளவு குறைந்த நாட்களில் 3 மில்லியன் ஃபாலோயர்களை இன்ஸ்டாகிராமில் பெற்ற முதல் கோலிவுட் நடிகர் சிம்பு தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சிம்புவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சிம்பு ஆக்டிவ்வாக உள்ளார் என்பதும் அவர் நடித்து வரும் படங்கள் உள்பட பல்வேறு விஷயங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அவர் தற்போது கவுதம் மேனன் இயக்கிவரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அவர் ’பத்து தல’ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.