செல்போன் நெட்வொர்க் மூலம் கஜா நிவாரண நிதி: சிம்புவின் புதிய ஐடியா
Send us your feedback to audioarticles@vaarta.com
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிக்கு அரசியல் கட்சிகள், திரையுலகினர் உள்பட பலர் லட்சங்களிலும் கோடிகளிலும் உதவி செய்து வருகின்றனர். ஆனால் இந்த உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை போய் சேர்ந்ததா? சேர்ந்தது என்றால் எப்படி சென்றது? யார் யார் பலன் பெற்றனர்? எவ்வளவு பயன் பெற்றனர்? என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து சிம்பு ஒரு ஐடியாவை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் செயல்படும் அனைத்து செல்போன் நெட்வொர்க் நிறுவனங்களும் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி நிவாரண நிதியை சேகரிக்க வேண்டும். அவ்வாறு சேகரிக்கப்பட்ட தொகையை அனைவருக்கும் தெரியும்படி பட்டியலிட்டு அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு பெற்ற தொகையை அரசும் இந்த காரியங்களுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது என்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்
இவ்வாறு அனைத்தும் வெளிப்படையாக நடந்தால் நம்முடைய பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு போய் சேர்ந்தது என்ற நிம்மதி 10 ரூபாய் முதல் பெரிய தொகை வரை கொடுத்தவர்களுக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார். சிம்பு கூறிய இந்த ஐடியா நடைமுறைக்கு சாத்தியமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
A nice thought and initiative by STR hope it all works out well #SaveDelta #uniteforhumanity #unitefordelta #STR pic.twitter.com/SFYsusYZs6
— Yuvanshankar raja (@thisisysr) November 21, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout