'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் ஸ்மார்ட் ரன்னிங் டைம்!

  • IndiaGlitz, [Wednesday,January 30 2019]

சிம்பு நடிப்பில் சுந்தர் இயக்கிய 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் வரும் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படம் சமீபத்தில் சென்சாருக்கு சென்று 'யூ' சான்றிதழ் பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் ரன்னிங் டைம் 156 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 36 நிமிடங்கள் கொண்டதாக உள்ளது. ஒரு பொழுதுபோக்கு கமர்சியல் படத்திற்கான ஸ்மார்ட் ரன்னிங் டைமை இந்த படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு, மேகா ஆகாஷ், கேதரின் தெரசா, மகத், பிரபு, ரம்யாகிருஷ்ணன், நாசர், யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் செய்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது