இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிம்புவின் அடுத்த சூப்பர்ஹிட் படம்!

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த சூப்பர் ஹிட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது.

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னை மும்பை உள்பட பல பகுதிகளில் நடந்து வந்த நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படப்பிடிப்புடன் சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விடும் என்றும் அதன் பின்னர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து அடுத்த வருடம் கோடை விடுமுறையின்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிம்புவின் ’மாநாடு’ திரைப்படம் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்திற்கு. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பதும், இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.