சிம்புவின் பாரதியார் கவிதை டைட்டில் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு ’வெந்து தணிந்தது காடு’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
இந்த டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமாக உள்ளது என்பதும் சிம்பு இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அழுக்கு உடையுடன் கையில் ஒரு கம்புடன் பரிதாபமான ஆனால் அதே நேரத்தில் அழுத்தமான பார்வையில் இருக்கும் சிம்புவின் இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏஆர் ரகுமான் இசையில், தாமரை பாடல் வரிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.@SilambarasanTR_'s #STR47 with @VelsFilmIntl titled as #VendhuThanindhathuKaadu ????
— Vels Film International (@VelsFilmIntl) August 6, 2021
Dir @menongautham Music @arrahman
Prod @IshariKGanesh #Rajeevan @jeyamohanwriter @utharamenon5 @siddharthcinema @editoranthony @Kavithamarai @Ashkum19 @shiyamjack @DoneChannel1 pic.twitter.com/2avyCO3s10
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com