வேகமாக வளரும் சிம்பு திரைப்படம்: அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் விரைவில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் சிம்பு தனது அதிகபட்ச உழைப்பை கொட்டி வருகிறார் என்றும் குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவர் அதிக ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார் என்றும் படக்குழுவினர் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மும்பை படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்ததாக நான்காம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் இந்த படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதி வருகிறார். கவிஞர் தாமரை பாடல் வரிகளில், சித்தார்த்தா நுனி என்பவரின் ஒளிப்பதிவில், அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Exciting News is Here!#VendhuThanindhathuKaadu 2nd Schedule Wrapped and 3rd Schedule to begin soon in Mumbai@SilambarasanTR_ has worked super duper hard in stunt sequences and it's gonna be a great treat to watch@menongautham @arrahman @IshariKGanesh @rajeevan69 @VelsFilmIntl pic.twitter.com/ZWxnUPeFA9
— Diamond Babu (@idiamondbabu) September 20, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments