close
Choose your channels

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய அப்டேட்!

Wednesday, August 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி உள்ளது.

சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் இந்த படத்திற்காக சிம்பு மேலும் உடல் எடையை குறைத்து ஒரு கிராமத்து இளைஞர் கேரக்டரில் நடிக்கிறார் என்பதும் தெரிந்ததே. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க இருப்பதாகவும், சிம்பு மற்றும் நாயகி காயடுலோஹர் ஆகிய இருவருக்கும் இடையிலான காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏஆர் ரகுமான் இசையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை அடுத்து விரைவில் இந்த படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு ஏற்கனவே ‘பத்து தல’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்றும், அதுமட்டுமின்றி இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘கொரோனா குமார்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment