சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படம் குறித்து சூர்யா என்ன சொன்னார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்த ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை இந்த படத்திற்கு கொடுத்து வருகின்றனர். இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்ததுமே பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என்பதும் இதனால் இந்த படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
19 வயது இளைஞன் தன்னுடைய சொந்த ஊரில் இருந்து பிழைப்புக்காக மும்பை செல்லும் நிலையில் அங்கு கேங்க்ஸ்டர்களிடம் சிக்கிக் கொள்கிறான். அதன்பின் ஒவ்வொரு கட்டமாக கேங்க்ஸ்டரின் தலைவனாக அந்த இளைஞன் மாறுவது எப்படி என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.
முத்து என்ற கிராமத்து இளைஞனாகவும் படிப்படியாக கேங்க்ஸ்டராக வளரும் சிம்புவின் நிலையை இயக்குனர் கௌதம் மேனன் மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாகவும் ஏஆர் ரகுமானின் தெறிக்க வைக்கும் பின்னணி இசையோடு செல்கிறது என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் நல்ல விமர்சனங்களை கேட்டு தான் மகிழ்ச்சி அடைந்ததாகவும் இந்த படத்தை காண காத்திருப்பதாகவும் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் கௌதம் மேனன், சிம்பு, ஏஆர் ரகுமான் மற்றும் வேல்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயண்ட் மூவீஸ் ஆகியோருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் இந்த வாழ்த்திற்கு பதிலளித்துள்ள சிம்பு, ‘மிகவும் நன்றி அண்ணா உங்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்’ என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ், சூரி, கௌதம் கார்த்திக் உள்பட பலர் தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் என்பதும், சிம்பு அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Hearing such good things about #VTK.. Waiting to watch.. Happy for @menongautham
— Suriya Sivakumar (@Suriya_offl) September 15, 2022
Rock on @silambarasanTR_ Best wishes for a huge success team!! @arrahman sir @VelsFilmIntl @RedGiantMovies_
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments