'கோப்ரா' நிலைமை தெரிந்தும் 3 மணி நேர படத்தை வெளியிடும் பிரபல இயக்குனர்: என்ன ஆகும்?

சமீபத்தில் வெளியான விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான ’கோப்ரா’ திரைப்படம் மூன்று மணி நேரம் என்ற நீண்ட ரன்னிங் டைம் கொண்ட படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது என்பதும் இதனை அடுத்து படக்குழுவினர் 20 நிமிட காட்சிகளை குறைத்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் மூன்று மணி நேரம் ரன்னிங் டைம் என்பது ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விடும் என்பதால் பல இயக்குனர்கள் தற்போது இரண்டரை மணி முதல் இரண்டே முக்கால் மணி நேர திரைப்படமாக மாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் வரும் 15ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் என்று கூறப்படுகிறது. இயக்குனர் கவுதம் மேனன் சென்சாருக்கு இந்த படத்தை அனுப்பிய நிலையில் மூன்று மணி நேர காப்பியை அவர் அனுப்பி இருப்பதாகவும் சென்சாரில் ஒரு சில காட்சிகள் கட் செய்தாலும் மூன்று மணிநேரத்தை இந்த படத்தின் ரன்னிங் டைம் நெருங்கி விடும் என்றும் கூறப்படுகிறது.

எனவே சென்சார் ஆகி வந்த பிறகு ஒருசில காட்சிகளை படக்குழுவினர் குறைப்பார்களா? அல்லது ’கோப்ரா’ நிலைமை தெரிந்தும் மூன்று மணி நேர ரன்னிங் டைம் கொண்ட படத்தை வெளியிடுவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் மூன்று மணி நேர ரன்னிங் டைம் ஆக இருந்தாலும் சுவராசியமான மற்றும் விறுவிறுப்பான காட்சிகள் இருந்தால் நேரம் போவது தெரியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.