ஒரே நாளில் தனுஷ்-சிம்பு படங்கள் ரிலீசா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகை பொறுத்தவரை ஒரே நாளில் மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆனால் அந்தந்த ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்பது தெரிந்ததே. ரஜினி - கமல், அஜித் - விஜய் ஆகியோரின் பல படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் சிம்பு - தனுஷ் படங்களும் ஒரு சில நேரங்களில் ஒரே நாளில் ரிலீஸ் ஆகியுள்ளன. இந்த் நிலையில் மீண்டும் சிம்பு-தனுஷ் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் தனுஷ் நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படமும் அதே ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சுதந்திர தினத்தை ஒட்டி இந்த இரு படங்களும் ரிலீஸ் ஆனால் இரு தரப்பு ரசிகர்களுக்கும் குஷியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments