சசி இயக்கும் அடுத்த படத்தில் 'வெந்து தணிந்தது காடு' நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் சசி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வரும் நடிகை ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘சொல்லாமலே’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சசி அதன்பின் ’ரோஜா கூட்டம்’ ’பூ’ ’பிச்சைக்காரன்’ ’சிவப்பு மஞ்சள் பச்சை’ ஆகிய திரைப்படங்களை இயக்கினார் என்பதும் தற்போது அவர் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகை சித்தி இட்னானி என்பவர் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த தகவலை புகைப்படத்துடன் ஹரிஷ் கல்யாண் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கிவரும் ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் சித்தி இட்னானி இணைந்ததாக புகைப்படத்துடன் கூடிய ஒரு போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு, குஜராத்தி படங்களில் நடித்து உள்ள சித்தி இட்னானி தற்போது தமிழிலும் பிசியாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
A #Sasi directorial.
— Harish Kalyan (@iamharishkalyan) January 6, 2022
Updates coming shortly …
Welcome to #Kollywood you sweet girl @SiddhiIdnani May you shine bright always ??❤️ pic.twitter.com/DXuzEUlKiu
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments