என்னை நம்பாக கெட்டவங்க நிறைய பேரு : 'வந்தா ராஜாவாதான் வருவேன்' டிரைலர் விமர்சனம்

  • IndiaGlitz, [Saturday,December 01 2018]

சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் லைகாவின் தயாரிப்பில் உருவாகி வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சிம்புவின் வழக்கமான ஸ்டைல் அறிமுகம், பஞ்ச் டயலாக்குகள், சுந்தர் சியின் கலர்புல் காட்சிகள் இந்த படத்தின் டிரைலரில் தெரிவதால் சிம்பு ரசிகர்களுக்கு இந்த படம் செம விருந்து என்பது உறுதியாகிறது.

மேகா ஆகாஷ், கேதரின் தெரசா இரண்டு நாயகிகளும் கவர்ச்சிக்கும் பாடலுக்கும் உதவியுள்ளனர். யோகி பாபு மற்றும் ரோபோ சங்கர் மாறி மாறி சிம்புவிடம் அடிவாங்கி காமெடி செய்துள்ளனர். பிரபு, ரம்யா கிருஷ்ணன் சீரியஸ் காட்சிகளில் தோன்றுகின்றனர்.

 

என்னை நம்பி கெட்டவங்க யாரும் இல்லை நம்பாம கெட்டவங்க நிறைய பேரு, எல்லார் லவ்வையும் சேர்த்து வைக்க நான் இருக்கேன் என் லவ்வை சேர்த்து வைக்க யாரு இருக்கா?,

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பாடல்கள் தாளம் போட வைக்கும் அளவுக்கு உள்ளது. மொத்தத்தில் இந்த டிரைலரின் மூலம் சுந்தர் சி ஒரு கமர்ஷியல் படத்தை சிம்பு ரசிகர்களுக்கு அளிக்கவுள்ளார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

More News

கமலுக்கு மூளையில் கோளாறு: அமைச்சர் செல்லூர் ராஜூ

சமீபத்தில் டெல்டா மாவட்டங்களை சிதறடித்த கஜா புயலை விட அதை வைத்து அரசியல்வாதிகள் செய்யும் அரசியல் கொடூரமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் வருத்தத்துடன் கூறி வருகின்றனர்.

மரண மாஸ் தலைவர் குத்து: 'பேட்ட' சிங்கிள் குறித்து கார்த்திக் சுப்புராஜ்

ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

இது என்ன 3 மணி நேர திரைப்படமா? கமல்ஹாசனுக்கு அமைச்சர் கேள்வி

கமல்ஹாசனுக்கு அனுபவம் கிடையாது. 3 மணிநேர திரைப்படம் போலவே உடனடியாக கிளைமேக்ஸ் காட்சி வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்.

சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை: இயக்குனர் ரஞ்சித்

'அட்டக்கத்தி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் ரஞ்சித், 2வது படமான 'மெட்ராஸ்' படத்தின் மூலம் அனைவரையும் தன் பக்கம் திரும்ப வைத்தார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் காலமானார்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் ஹெர்பெர்ட் வாக்கர் புஷ் இன்று காலமானார். அவருக்கு வயது 94