ரஜினியுடன் இணையும் சிம்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை ஒரு புரமோ வீடியோ மூலம் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா வெளியிட்டுள்ளது. சிம்பு அட்டகாசமாக நடந்து வரும் இந்த வீடியோவில் இந்த படத்தின் டீசர் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில்தான் ரஜினியின் '2.0' ரிலீஸ் ஆவதால் அந்த படம் வெளியாகும் திரையரங்குகளில் 'வந்தா ராஜாவாத்தான் வருவேன்' படத்தின் டீசரும் வெளியாகும் என தெரிகிறது.
'செக்க சிவந்த வானம்' படத்தின் வெற்றியை அடுத்து சிம்புவின் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ரஜினி மற்றும் அஜித் படங்களுடன் பொங்கல் தினத்தில் மோதும் அளவுக்கு படக்குழுவினர் இந்த படம் குறித்து அதிகபட்ச நம்பிக்கையில் உள்ளனர்.
சிம்பு, மேகா ஆகாஷ், கேதரின் தெரசா, மகத், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வருகிறார்.
#VandhaRajavadhanVaruven Teaser Releasing ON.....#VRVTeaser #STR #SundarC #MASS ?????? https://t.co/tkgubmP7il
— Lyca Productions (@LycaProductions) November 22, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com