சிம்புவின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? 'எஸ்.டி.ஆர் 48' என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Friday,June 07 2024]

சிம்பு தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘எஸ்.டி.ஆர் 48’ படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சிம்பு சமீபத்தில் இயக்குனர் எம்ஆர் மாதவன் கூறிய கதையை கேட்டதாகவும் அவர் கதை சொல்லும் விதம் மற்றும் அவரது கதை ஆகியவை சிம்புவை கவர்ந்ததாகவும், இதனை அடுத்து அந்த படத்தில் பணிபுரிய சிம்பு முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த படத்தின் தயாரிப்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பதால் விரைவில் மற்ற பணிகள் தொடங்கும் என்றும் சிம்பு இந்த படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ’தக்லைஃப்’ மற்றும் ‘எஸ்.டி.ஆர் 48’ ஆகிய இரண்டு படங்களும் முடிவதற்கு கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் ஆகும் என்ற நிலையில் அதன் பிறகு தான் எம்ஆர் மாதவன் படத்தில் சிம்பு இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் எம்ஆர் மாதவன் இதற்கு முன்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு ’டைனோசர்ஸ்’ என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பதும் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நிவேதா பெத்துராஜ் டிராமா போட்ட 'பருவு' வெப் தொடர்.. டிரைலரே பயங்கரமா இருக்குதே..!

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை நிவேதா பெத்துராஜ் காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதம் செய்வது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலான நிலையில்

தேர்தலில் தோல்வி அடைந்த சில நாட்களில் கனிமொழியை சந்தித்த நடிகை ராதிகா. .என்ன காரணம்?

சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட நடிகை ராதிகா தோல்வி அடைந்த நிலையில் தற்போது அவர் திமுக எம்பி கனிமொழியை அவரது இல்லத்தில் சந்தித்த புகைப்படம்

அந்த அடி நடிகைக்கானது அல்ல, வாக்களித்த மக்களுக்கு.. கங்கனாவை அடித்த பெண் குறித்து தமிழ் இயக்குனர்..!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை நேற்று பெண் காவலர் ஒருவர் கன்னத்தில் அடித்த நிலையில் இது குறித்து தமிழ் இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் 'அந்த அடி நடிகைக்கானது அல்ல

இந்திய அணியில் இடமில்லை.. ஒரே மேட்சில் அமெரிக்காவின் ஹீரோவான இந்திய வீரர்.. யார் இந்த சவுரப் நெத்ரவால்கர்!

இந்திய அணியில் இடம் கிடைக்காமல் மன விரக்தியில் அமெரிக்கா சென்று மேற்படிப்பு படிக்கச் சென்ற இந்திய வீரர் சவுரப் நெத்ரவால்கர், தற்போது அமெரிக்க கிரிக்கெட் அணியில் கலக்கி வருகிறார்

2 அரசியல் கட்சி தலைவர்களுக்கு மட்டும் வாழ்த்து சொன்ன விஜய்.. 2026ல் கூட்டணி உறுதியா?

நடைபெற்ற முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மொத்தமாக 40க்கு 40 என்ற வெற்றியை பெற்றுள்ள நிலையில் தமிழகத்தின் இரண்டு அரசியல் கட்சி தலைவர்களுக்கு மட்டும் தளபதி விஜய் வாழ்த்து கூறியிருப்பது