close
Choose your channels

சிம்புவின் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா? 'எஸ்.டி.ஆர் 48' என்ன ஆச்சு?

Friday, June 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘எஸ்.டி.ஆர் 48’ படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சிம்பு சமீபத்தில் இயக்குனர் எம்ஆர் மாதவன் கூறிய கதையை கேட்டதாகவும் அவர் கதை சொல்லும் விதம் மற்றும் அவரது கதை ஆகியவை சிம்புவை கவர்ந்ததாகவும், இதனை அடுத்து அந்த படத்தில் பணிபுரிய சிம்பு முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த படத்தின் தயாரிப்பாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பதால் விரைவில் மற்ற பணிகள் தொடங்கும் என்றும் சிம்பு இந்த படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி என்றும் கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ’தக்லைஃப்’ மற்றும் ‘எஸ்.டி.ஆர் 48’ ஆகிய இரண்டு படங்களும் முடிவதற்கு கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் ஆகும் என்ற நிலையில் அதன் பிறகு தான் எம்ஆர் மாதவன் படத்தில் சிம்பு இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் எம்ஆர் மாதவன் இதற்கு முன்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு ’டைனோசர்ஸ்’ என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பதும் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment