close
Choose your channels

சிம்புவின் அடுத்த படம் வெளியாக இன்னும் 2 ஆண்டுகள் ஆகுமா? ரசிகர்கள் அதிருப்தி.!

Thursday, November 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்புவின் அடுத்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டு தான் வெளியாகும் என்று கூறப்படுவதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்கள் ஆண்டுக்கு இரண்டு படங்கள் ரிலீஸ் செய்து கொண்டிருக்கும் நிலையில் சிம்பு நடித்த ’பத்து தல’ என்ற திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியான நிலையில் அவர் அடுத்ததாக ’சிம்பு 48’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக இருக்கும் ’சிம்பு 48’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இருப்பினும் சிம்புவின் கெட் அப் மற்றும் ஒரு சில ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டு தான் தொடங்கும் என்றும் கிட்டத்தட்ட ஒரு வருடம் இந்த படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் இந்த படம் 2025 ஆம் ஆண்டு தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதற்கிடையில் சிம்புவின் வேறு எந்த படங்களும் ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என்பதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இரண்டு ஆண்டுகள் கழித்து வந்தாலும் சிம்புவின் மாஸ் படமாக இந்த படம் இருக்கும் என்றும் இரண்டு வித்தியாசமான வேடங்களில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் அடுத்த ஆண்டு படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பே டெஸ்ட் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் அந்த படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment