வேற லெவலில் மாஸ் லுக்.. சிம்புவின் 'எஸ்டிஆர் 48' செம்ம வீடியோ..!

  • IndiaGlitz, [Monday,February 26 2024]

சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் ‘எஸ்டிஆர் 48’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்றுமுன் திடீர் இன்ப அதிர்ச்சியாக இந்த படத்தின் வீடியோவை சிம்பு தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஹாலிவுட் படத்திற்கு இணையாக கிராபிக்ஸ் காட்சிகளுடன் சிம்பு அறிமுகம் ஆகும் காட்சிகள் இந்த வீடியோவில் இருப்பதை அடுத்து இவை சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்து ஆக பார்க்கப்படுகிறது.

மேலும் அடுத்தடுத்து இந்த படத்தின் அப்டேட்டுகள் வரும் என்றும் எதிர்பார்ப்புடன் காத்திருங்கள் என்றும் சிம்பு இந்த பதிவில் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். மொத்தத்தில் இந்த படம் சிம்புவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்றும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் சிம்பு ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கேரக்டர்களில் சிம்பு நடிக்க இருப்பதாக செய்தி வெளியான நிலையில் அதில் ஒரு கேரக்டர் திருநங்கை என்று கூறப்பட்டது.

மேலும் இந்த படம் பான் - இந்திய படமாக உருவாகும் என்பதால் பாலிவுட் பிரமுகர்கள் உட்பட பலர் ஆச்சரியத்தக்க வகையில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.