சிம்புவின் பிறந்த நாள் பரிசாக வரும் செம்ம அறிவிப்பு: ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்ட தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் ’சிம்பு 48’. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் சிம்புவும் வெளிநாடு சென்று இந்த படத்திற்காக தனது உடல் அமைப்பை தயார் செய்து வந்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சிம்புவின் பிறந்த நாள் பிப்ரவரி 3ஆம் தேதி கொண்டாட இருக்கும் நிலையில் பிப்ரவரி 2ஆம் தேதி அதாவது நாளை அவரது ரசிகர்களுக்கு தரும் சிறப்பு பரிசாக ’சிம்பு 48 ’படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாக உள்ளது.
இந்த தகவலை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து சிம்பு ரசிகர்கள் நாளை வெளியாக போகும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த படம் சிம்புவின் முதல் 100 கோடி ரூபாய் பட்ஜெட் படம் என்பதும் அது மட்டும் இன்றி ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு வித்தியாசமான வேடங்களில் சிம்பு நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிம்புவுக்கு ஜோடியாக தீபிகா படுகோன், கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்திய திரை உலகில் உள்ள பிரபல நட்சத்திரங்களும் இந்த படத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் இந்த படம் இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#STR48 making its First Twinkle on 2nd February.
— Raaj Kamal Films International (@RKFI) January 31, 2024
Let the Celebrations Begin! ✨#Ulaganayagan #KamalHaasan #Atman #SilambarasanTR #BLOODandBATTLE #RKFI56_STR48@ikamalhaasan @SilambarasanTR_ @desingh_dp #Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments