இது யாரு குத்து, பெரியாரு குத்து: சிம்புவின் தனிப்பாடல் விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்புவின் தனிப்பாடல்கள் அவரது படங்களை போலவே வெற்றி பெறும் என்பது தெரிந்ததே. எந்த ஒரு பணியையும் அவர் முழு ஈடுபாட்டுடன் செய்வதே இதற்கு முக்கிய காரணம். தனிப்பாடலாக இருந்தாலும் அதிலும் சீரியஸாக பணிபுரிந்துள்ளதே இன்று வெளியாகியுள்ள 'பெரியார் குத்து பாடலின் வெற்றியாக கருதப்படுகிறது.
சற்றுமுன் வெளியாகியுள்ள 'பெரியார் குத்து' பாடலில் சைக்கிள் ரிக்சாவில் இருந்து வேஷ்டி மற்றும் கருப்பு சட்டையில் அறிமுகமாகும் சிம்பு, வழக்கம்போல் இந்த பாடலிலும் தனது தனித்திறமையான குத்தாட்டத்தில் அசத்தியுள்ளார். மதன்கார்க்கி எழுதிய இந்த பாடலின் ஒவ்வொரு வரியிலும் பெரியாரின் பெருமை மட்டுமின்றி பெரியாரை ஏளனம் செய்வோருக்கு சவுக்கடி தரும் வகையிலும் அமைந்துள்ளது.
குறிப்பாக
கிழவன் சிலைய உடைக்கும் கழுத என்ன செஞ்சு கிழிக்கும்?
பழைய நெருப்ப திருப்பி கிளப்பி குழம்பி நின்னு முழிக்கும்..
உண்மையான நாய் அது நன்றியோட கிடக்கும்...
அட வேஷம் போட்டு வந்த நாய் மானம் கெட்டு குலைக்கும்...
ஆகிய வரிகள் சமீபத்தில் பெரியாரின் சிலைகளை சேதப்படுத்தியவர்களுக்கான பதிலடியாக உள்ளது.
மொத்தத்தில் இந்த பாடல் பெரியாரின் அபிமானிகளுக்கும் சிம்புவின் ரசிகர்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout