close
Choose your channels

சிம்புவின் 'பத்து தல' படத்தின் சூப்பர் அப்டேட்.. ரசிகர்கள் செம குஷி!

Saturday, January 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ‘பத்து தல’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படம் மார்ச் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து சிம்பு ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிய இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் அது குறித்து அறிவிப்பு வழியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்களை சோனி மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளதாக பட குழுவினர் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்தை ’சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கியுள்ளார் என்பதும் இந்த பட்அத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment