சிம்பு பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில் உருவாகிய ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த ‘நம்ம சத்தம்’ என்ற இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார் என்றும் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் நடன இயக்கம் செய்து உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த பாடல் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாள் விருந்தாக வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர்.
சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை சூர்யா ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ என்ற படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கி உள்ளார். இசை புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.
It’s going to be #NammaSatham everywhere! 🔥🔥🔥🔥
— Sony Music South (@SonyMusicSouth) January 31, 2023
Single from Feb 3rd! 🥁
An @arrahman special! 🎶😎
✍🏾 @Lyricist_Vivek
🕺 @iamSandy_Off @SilambarasanTR_ @Gautham_Karthik @priya_Bshankar @nameis_krishna @StudioGreen2 @kegvraja @PenMovies @jayantilalgada#PathuThala pic.twitter.com/FB06Hl7uWe
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments