close
Choose your channels

சிம்புவின் 'பத்து தல' படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

Tuesday, March 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த ‘பத்து தல’ என்ற திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் இணையதளங்களை ஸ்தம்பிக்க வைத்தது என்பதும் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கின்றார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மார்ச் 30ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ரன்னிங் டைம் 152 நிமிடங்கள் என்றும் அதாவது 2 மணி நேரம் 32 நிமிடங்கள் என்றும் கூறப்படுகிறது. 2:30 மணி நேரம் என்பது மிகச் சரியான ரன்னிங் டைம் என்றும் இதனால் இந்த படம் வெற்றி பெறும் என்றும் திரையுலகினர் கூறி வருகின்றனர்.

சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கலையரசன், அனு சித்தாரா, டிஜே அருணாசலம், ரெடின் கிங்ஸ்லி, மனுஷ்யபுத்திரன், செண்டாயன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பரூக் பாஷா ஒளிப்பதிவில் ப்ரவீன் கே.எல். படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment