சிம்புவின் 'பத்து தல' ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
சிம்பு, கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் ‘பத்து தல’ படத்தை கிருஷ்ணா இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது தெரிந்ததே. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர்.
சிம்பு நடித்த ’மாநாடு’ மற்றும் ’வெந்து தணிந்தது காடு’ ஆகிய இரண்டு படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் சிம்புவின் ஹாட்ரிக் வெற்றி படமாக ‘பத்து தல’ அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பாடல்கள், டீஸர், டிரைலர் ஆகியவைகளும் அடுத்தடுத்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Celebration Begins ??????✨??
— Studio Green (@StudioGreen2) December 31, 2022
Here's the #NewYear2023 Delight from #PathuThala ??✨??
We are super excited to release Pathu Thala In Theatres From March 30 ??✨
Worldwide #StudioGreen Release??#PathuThalaFromMarch30 #Atman #SilambarasanTR #AGR@StudioGreen2 @Kegvraja pic.twitter.com/fYsTe6bnip
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments