ஓடிடியில் சிம்புவின் 'பத்து தல': எந்த ஓடிடியில்? எப்போது?

  • IndiaGlitz, [Saturday,April 22 2023]

சிம்பு நடிப்பில் உருவான ’பத்து தல’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் உலகம் முழுவதும் 55 கோடி வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற ’பத்து தல’ திரைப்படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 27ஆம் தேதி ’பத்து தல’ திரைப்படம் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இந்த தகவலை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் கலையரசன், சந்தோஷ் பிரதாப், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை கிருஷ்ணா இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிஎஸ்கே போட்டியை முதல்வர் குடும்பத்துடன் பார்த்து ரசித்த அஜித் குடும்பம்.. 'குட்டித்தல'யின் க்யூட் புகைப்படம்..!

நேற்றைய சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது என்பதும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி

நட்ராஜ் குழந்தையுடன் விளையாடிய தல தோனி.. க்யூட் வீடியோ வைரல்..!

தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நட்ராஜ் குழந்தையுடன் தல தோனி விளையாடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

அஜித்தின் வேர்ல்ட் பைக் டூர்.. எந்த நாட்டில் இருக்கிறார் தெரியுமா?

நடிகர் அஜித் ஒரு பக்கம் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் உலக அளவில் பைக் சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார் என்பதை அவ்வப்போது அவர் பல நாடுகளில் பைக்கில்

ஒரு மாதத்தில் திருமணமா? நடிகை ஷெரின் வீடியோ வைரல்..!

நடிகை ஷெரின் சமீபத்தில்  ரசிகர் ஒருவரிடம்  சமூக வலைத்தளத்தில் உரையாடிய போது உங்களுக்கு திருமணம் எப்போது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் என்று

'விடுதலை' முதல் பாகத்தில் 20 நிமிட காட்சிகள் இணைக்கப்படுகிறதா? 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த 'விடுதலை' திரைப்படத்தின் முதல் பாகத்தில் 20 நிமிட காட்சிகள் இணைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.