சிம்புவின் 'பத்து தல' படத்தின் மாஸ் தகவல்.. ரசிகர்கள் உற்சாகம்!

  • IndiaGlitz, [Thursday,January 05 2023]

சிம்பு நடித்த ‘பத்து தல' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. சமீபத்தில் இந்த படம் மார்ச் 30ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி ‘பத்து தல’ படத்தின் சிங்கிள் பாடல் மிக விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசையில் உருவாகியுள்ள படத்தின் சிங்கிள் பாடலை கேட்க ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மார்ச் 30ஆம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ள நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இனி வரும் நாட்களில் அடுத்தடுத்து ‘பத்து தல’ படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வரும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். சூர்யா-ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ என்ற படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ’மாநாடு’ ’வெந்து தணிந்தது காடு’ ஆகிய படங்களை அடுத்து சிம்புவின் ஹாட்ரிக் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.