சிம்புவின் 'பத்து தல' படத்தின் சூப்பர் அப்டேட்.. ரசிகர்கள் குஷி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னால் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வரும் மார்ச் 30ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் ‘பத்து தல’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு நாளை மாலை 5.04 மணிக்கு அறிவிக்கப்படும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அனேகமாக சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3ஆம் தேதி முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது.
சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை சூர்யா ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ என்ற படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கி உள்ளார் என்பதும் இசை புயல் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
You asked and we've heard you! Gear up for the #PathuThalaFirstSingle announcement arriving tomorrow @ 5.04PM! ❤🔥#PathuThala #Atman #SilambarasanTR #AGR #PathuThalaFromMarch30
— Studio Green (@StudioGreen2) January 30, 2023
Starring : @SilambarasanTR_ @Gautham_Karthik @priya_Bshankar
An @arrahman Musical pic.twitter.com/MwZy4osgNZ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments