பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் டிஜிட்டல் உரிமையில் மட்டுமே.. சிம்புவின் 'பத்து தல' பிசினஸ்!

சிம்பு நடித்து வரும் பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிசினஸ் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிம்பு நடிப்பில், கிருஷ்ணா இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் பத்து தல’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும் போதே இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகளும் இன்னொரு பக்கம் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தை டிசம்பர் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் பத்து தல’ படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே இந்த படத்தின் பிசினஸ் தொடங்கி விட்டது. முதல்கட்டமாக பத்து தல’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான பின்னர் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை ரூ 26 கோடி கொடுத்து அமேசான் நிறுவனம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 40-50 கோடி என்று கூறப்படும் நிலையில் படத்தின் பட்ஜெட்டில் பாதிக்குமேல் டிஜிட்டல் உரிமையிலிருந்து மட்டுமே தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளதால் இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையும் மிகப்பெரிய தொகைக்கு போகும் என்றும் அதேபோல் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உள்பட மற்ற அனைத்து ரிலீஸ் உரிமைகளும் நல்ல விலைக்கு போகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிம்பு நடித்த ’மாநாடு’ மற்றும் ’வெந்து தணிந்தது காடு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதால் பத்து தல’ படத்தின் பிசினஸ் இதுவரை இல்லாத அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.