சிம்புவின் 'பத்து தல' படத்தின் பொங்கல் ஸ்பெஷல் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,January 16 2021]

சிம்பு நடித்த ’ஈஸ்வரன்’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் இந்த திரைப்படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துள்ளதை அடுத்து இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்த நிலையில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதும் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்பு நடிக்க உள்ள அடுத்த படத்தின் டைட்டில் ’பத்து தல’ என்றும் இந்த படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ’பத்து தல’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரி 18ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொங்கல் விருந்தாக சிம்பு ரசிகர்களுக்கு ’ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் தற்போது இந்த அறிவிப்பு பொங்கல் ஸ்பெஷல் விருந்தாக சிம்பு ரசிகர்களுக்கு இருக்கும் என கருதப்படுகிறது.

More News

அடுத்த படத்தில் சரி செய்து கொள்வேன்: 'மாஸ்டர்' நெகட்டிவ் விமர்சனம் குறித்து லோகேஷ்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த 13ஆம் தேதி தமிழகம் உள்பட இந்தியா உலகம் முழுவதும் வெளியானது

நாளை பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனை மணி நேரம்: கமல்ஹாசன் அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே இன்றும் நாளையும் நடைபெற போகிறது என்பதும் 105 நாட்களாக நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பதை கமல்ஹாசன் நாளை அறிவிக்க இருக்கிறார் என்பதும் தெரிந்ததே 

'வலிமை' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் எப்போது? படக்குழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல்!

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் அடுத்த மாதம் நிறைவடைந்து விடும்

வெற்றிப்பட இயக்குனருடன் மூன்றாவது முறையாக இணையும் நயன்தாரா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' விக்னேஷ் சிவன் இயக்கிவரும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' மற்றும் 'நெற்றிக்கண்'

அப்செட்டா இருந்துச்சு, கஷ்டமா இருந்துச்சு: கமல்ஹாசனிடம் புலம்பிய ரம்யா, ரியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றும் நாளையும் இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் நாளை கிளைமாக்ஸில் டைட்டில் வின்னர் யார் என்பது அறிவிக்கப்படும். இந்த நிலையில் இன்று ஒரு ட்விஸ்ட் இருக்கிறது