சிம்புவின் 'பத்து தல' டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை பெற்ற நிறுவனங்கள் இவைதான்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்த ‘பத்து தல’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது என்பதும் இதில் சிம்பு உள்பட பட குழுவினர் கலந்து கொண்டனர் என்பது தெரிந்ததே. மேலும் இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திரையரங்கு வெளியீட்டிற்கு பின்னர் இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையை அமேசான் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் சமீபத்தில் நடந்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜீ தமிழ் தொலைக்காட்சி வரும் ஏப்ரல் 2ஆம் தேதி ஒளிபரப்ப உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு, கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கௌதம் மேனன், கலையரசன், அனு சித்தாரா, டிஜே அருணாசலம், ரெடின் கிங்ஸ்லி, மனுஷ்யபுத்திரன், செண்டாயன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை கிருஷ்ணா இயக்கியுள்ளார். பரூக் பாஷா ஒளிப்பதிவில் ப்ரவீன் கே.எல். படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
ஏற்கனவே இந்த திரைப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 32 நிமிடங்கள் என்றும், இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பதையும் பார்த்தோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout