சிம்புவின் 'பத்து தல' படப்பிடிப்பு: வைரல் புகைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ள ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சிம்பு, ஹன்சிகா நடித்த ’மஹா’ படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிம்புவின் நடிப்பில் உருவாக இருக்கும் இன்னொரு படம் ’பத்து தல’. சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கெளதம் கார்த்திக் தனது சமூக வலைத்தளத்தில் நீண்ட நாட்களாக ஆவலுடன் காத்திருந்த ’பத்து தல’ படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. சிம்பு தற்போது ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் ’பத்து தல’ படப்பிடிப்பில் அவர் விரைவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது மட்டுமின்றி இயக்குனர் கோகுல் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகவிருக்கும் ’கொரோனா குமார்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் இந்த படப்பிடிப்பில் அவர் விரைவில் கலந்து கொள்ள உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் ’மஞ்சப்பை’ இயக்குனர் ராகவன் சிம்புவுக்கு ஒரு கதை கூறி உறுதி செய்து இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் சிம்பு தமிழ் திரையுலகின் பிசியான நடிகராக மாறிவிட்டார் என்பதே தற்போதைய உண்மையாக உள்ளது.
A New Beginning,
— Gautham Karthik (@Gautham_Karthik) August 26, 2021
The start of a journey that I've spent a long time waiting for. #Day1#PathuThala pic.twitter.com/4bbk9wAoO2
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments