சிம்புவின் 'பத்து தல' படத்தின் மாஸ் அப்டேட்!

  • IndiaGlitz, [Tuesday,May 10 2022]

சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது சிம்பு தனது அடுத்த படமான ’பத்து தல’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘முப்தி’ என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படமான ’பத்து தல’ திரைப்படத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கவுள்ளனர். சிம்பு கேங்க்ஸ்டர் கேரக்டரிலும், கௌதம் கார்த்திக் காவல்துறை அதிகாரி கேரக்டரிலும் நடிக்கும் இந்த படத்தில் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்து விட்டது.

இந்த நிலையில் சிம்பு நடிக்கும் சில காட்சிகளும், சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியிருப்பதாகவும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மே 27ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் ஒரு மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கலையரசன், மனுஷ்யபுத்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். சூர்யா-ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பதும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.